அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸ் என்ற பகுதியில் ஆல்கஹால் மற்றும் கெமிக்கல் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்து காரணமாக அந்த பகுதியில் உள்ள சுமார் 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸ் நகரத்தில் பசுபிக் யூனியனை சேர்ந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த இரண்டு ரயில்களில் ஒரு ரயிலில் கெமிக்கல் பொருட்களும், மற்றொரு ரயிலில் ஆல்கஹால் திரவமும் இருந்ததால் ரயிலின் சில பெட்டிகள் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் இந்த பகுதியில் வாழும் சுமார் 500 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற மீட்புப்படையினர் தீப்பற்றி எரியும் ரயில்பெட்டிகளை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த இரண்டு தொழிலாளிகள் மரணம் அடைந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக இந்த பகுதி வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாற்று வழியில் செலுத்தப்பட்டுள்ளது.