‘மாஸ்’ படப்பிடிப்பில் கிண்டல் செய்த ரசிகர்கள். அழுதுகொண்டே ஓட்டமெடுத்த சூர்யா

surya cryமாபெரும் எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் கடந்த வெள்ளியன்று ரிலீஸான “அஞ்சான்” திரைப்படம் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரிசல்ட் பெற்றுள்ளது. மேலும் சமுக வலைத்தளங்களில் சூர்யா மற்றும் லிங்குசாமியை கிண்டல் அடித்தது போதாதென்று தற்போது சூர்யாவை நேரிலேயே ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனால் சூர்யா ஆத்திரமடைந்து பின்னர் அழுததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன் தினம் சென்னை ஈகா திரையரங்கம் முன்பு சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “மாஸ்” என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ரசிகர்கள் சிலர் சூர்யாவை, “இதோ பாருடா ராஜுபாய், என்றும் “இந்த படத்தில் ராஜு பாய் எத்தனை பேரை கொல்லப் போகிறார்? என்றும் கிண்டலடித்தனர்.

இதனால் கடுப்பான சூர்யா, ரசிகர்களிடம் ஆத்திரமாக பேசியுள்ளார். ஆனால் சூர்யாவின் ஆத்திரத்தை கண்டுகொள்ளாத ரசிகர்கள் “ராஜுபாய்க்கு கோபம் வந்துருச்சு வந்துருங்கடா என்றும், ‘அஞ்சான் படம் ஓடுவதை நாங்கள்தான் முடிவு செய்யணும், மாஸ் படம் ஓடனும் என்றாலும் அதையும் நாங்கள் தான் முடிவு செய்யவேண்டும்” என்று மீண்டும் மீண்டும் கிண்டலடித்தனர்.

இதனால் வேறு வழியின்றி மாஸ் படக்குழுவினர் போலீஸை வரவழைத்தனர். போலீஸார் விரைந்து வந்து ரசிகர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த இடத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சூர்யா படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு கண்ணீருடன் கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது.

சூர்யா இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த நல்ல பெயரை ஒரே படத்தில் லிங்குசாமி கெடுத்துவிட்டதாக சூர்யா பயங்கர கோபமாக உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply