பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடியாது என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி பெரும் சோர்வு அடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு எதிர்க்கட்சியாக தேர்வு செய்யப்பட்ட 55 எம்.பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் வெறும் 44 எம்.பிக்களை மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பதவி தங்களுக்கு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில் நேற்று பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவது இல்லை என்று நேறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்தார். ‘விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். இந்த முடிவை அவர் காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் மூலம் தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 1980 மற்றும் 1984ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு அமைந்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியே இல்லாமல் இருந்தது போல இம்முறையும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இன்றியே செயல்படும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.