ரத்து செய்யப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்கா முயற்சி.

modi and shariefபாகிஸ்தானுடனான வெளியுறவு செயலாளர் மத்தியிலான பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூலம் இந்த பேச்சு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் தங்கள் முயற்சி பயனளிக்கும் என்று நம்புவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளின் உறவை மேம்படுத்த அமெரிக்கா முழு ஆதரவும் அளிக்கும் என்று தெரிவித்த மேர் ஹார்ப், மோடி அரசு பதவியேற்ற பின்னர் இந்திய பாகிஸ்தான் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
மோடி பதவியேற்பு தினத்தன்றே இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த தாம் இருநாட்டு தலைவர்களிடமும் வலியுறுத்தியதாகவும், அதன்படி, வரும் 25-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் இரு நாட்டு வெளியுறவுச் செயலர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தை குறித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை பாகிஸ்தான் தூதர் சந்தித்து ஆலோசனை நடத்தியதன் காரணமாக, இரு நாட்டு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. எனவே மீண்டும் இந்த பேச்சுவார்த்தையை தொடங்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply