சென்னை அருகேயுள திருவேற்காடு பகுதியில் பிளாஸ்டி குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள திருவேற்காடில் தனியார் ஒருவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் ஒன்று உள்ளது. இங்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வடமாநில தொழிலாளர்களும் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் இந்த பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் தங்கியிருந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த அமர் (23), ராஜ் (22), திருச்செந்தூரைச் சேர்ந்த ரகு (26) காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரத்குமார் (26) ஆகிய 4 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சென்னையில் இருந்து, 15 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து திருவேற்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.