ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காரில் கடத்தி செல்லப்பட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகளை காஷ்மீர் போலீசார் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி நாசவேலைகளில் ஈடுபட இருந்ததாகவும், போலீஸாரின் நடவடிக்கையால் அது தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வடக்கு காஷ்மீர் பகுதியில் இன்று ஒரு கார் சந்தேகத்துக்கு இடமாக சென்று கொண்டிருந்ததால் அந்த காரை போலீஸார் சோதனை செய்தனர். காரில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலிஸார் அதை பறிமுதல் செய்து காரில் இருந்த இரண்டு பேர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரின் பாந்திபூரா மாவட்டத்தில் இன்று காலை நடந்துள்ளது.
காரில் இருந்தவர்களிடம் செய்யப்பட்ட விசாரணையில் தீவிரவாதிகளுக்கு இந்த ஆயுதங்களை சப்ளை செய்ய கொண்டு செல்வதாக தெரிய வந்தது. தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக இந்த ஆயுதங்கள் பெற்றுக்கொள்ள இருந்ததும் தெரிய வந்துள்ளது. கையெறி குண்டுகள், அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கி குண்டுகள், லாஞ்சர் மற்றும் 7 கே உள்ளிட்ட பல பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது