ஜெயலலிதா, சசிகலா வழக்கில் சமரசமா? இன்று மாலை முடிவு தெரியும்

sasikala - jaya 200(9)தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர்களின் சமரச மனுக்கள் மீது முடிவு எடுக்க புதிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கமிட்டியின் முடிவு இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்தது. இதனால் இந்த வழக்கின் விசாரணை இன்று மாலை வரை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

1991-92, 1992-93 ஆண்டுகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால் அவர்கள் மீது  வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை வருமான வரித்துறையுடன் தாங்கள் பேசி தீர்த்துக்கொள்வதாகவும், தங்களுக்குரிய வருமான வரித் தொகையை அபராதத்துடன் கட்ட தயாராக இருப்பதாகவும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து வருமான வரித்துறை உயரதிகாரிகளிடம் கேட்டு முடிவு செய்வதாக வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ராமசாமி கூறியிருந்தார்.

இன்று இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதாவின் சமரச மனு மீது முடிவு எடுக்க புதிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கமிட்டியின் முடிவு இன்று மாலை தெரியும் என்றும் வழக்கறிஞர் கூறியதை அடுத்து இந்த வழக்கு விசாரணையை மாலை 4 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Leave a Reply