இன்று சென்னையின் 375வது பிறந்தநாள். ஒரு சிறப்புப்பார்வை

chennai  1

இந்தியாவிலேயே முதல் நகரசபை என்ற பெருமையை பெற்ற சென்னை இன்று தனது 375வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம், ஆரம்ப காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து இருந்தது. சென்னை கடற்கரை பகுதியை ஒட்டியிருந்த இந்த கிராமங்கள் ‘சென்னப் பட்டிணம்’ என்று அழைக்கப்பட்டது.

1639 ஆம் ஆண்டு இங்கு வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், இந்தப் பகுதியை ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பு அமைக்க தேர்வு செய்து விலைக்கு வாங்கினார்கள். ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி இந்த நிகழ்வு நடந்ததால், அன்றைய தினமே சென்னையின் முதல் பிறந்த நாளாக கருதப்படுகிறது.

அதன்பின் ஓராண்டு கழித்து, இன்றைய தலைமை செயலகம் இயங்கி கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டையை மையப்படுத்தி ஆங்கிலேயர்களின் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டன. இதனால், ஆங்காங்கே பிரிந்து கிடந்த கிராமங்கள் ஒன்றிணைந்து நகரமாக உருவெடுக்க தொடங்கியது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1wgcjLl” standard=”http://www.youtube.com/v/OFF3RxD_pGY?fs=1″ vars=”ytid=OFF3RxD_pGY&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4139″ /]

1688 ஆம் ஆண்டு சென்னை முதல் நகர சபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. அதனால், இந்தியாவிலேயே முதல் நகரசபை என்ற பெருமை சென்னைக்கு கிடைத்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் வசம் இருந்த புனித ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் 1746 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளிலேயே அவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் சென்றது.

நகர சபையாக இருந்த சென்னை வளர்ச்சியடைய தொடங்கியதும், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் ரயில் பாதைகள் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. சென்னப் பட்டிணம் என்ற பெயர் அதன் பின்னர் மதராஸ் பட்டிணம், மதராஸ் மாகாணம் என்று பெயர் மாறியது.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக சென்னை விளங்கியது. 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகர் ஆனது. 1996 ஆம் ஆண்டு மதராஸ், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.

ஆரம்ப காலத்தில் 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டிருந்த சென்னையில் இன்று ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். சாப்ட்வேர் நிறுவனங்கள், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், கெமிக்கல் நிறுவனங்கள் உள்ளிட்டவை சென்னையில் அதிகம் இருப்பதால், வேலைவாய்ப்புகளை நம்பி இங்கு அதிகம் பேர் தங்கியுள்ளனர். அவர்களை நம்பி வியாபாரிகளும் கடைகளை விரித்துள்ளனர்.

இப்படியாக வளர்ந்து பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி வரும் வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரம், தனது 375வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. அதையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. chennai  5 chennai  6 chennai  7 chennai  9 chennai 2 chennai 3 chennai 4 chennai 8 chennai 10 chennai

Leave a Reply