சீனாவில் காங்கிரீட் கலவை இயந்திரம் ஒன்றின் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு இளம்பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள Hangzhou, Zhejiang province, என்ற பகுதியில் நேற்று காலை 7 மணியளவில் ஒரு காரில் இரண்டு இளம்பெண்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். கார் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் மெதுவாக சென்றுகொண்டிருந்த காங்கிரீட் கலவை எந்திர வாகனம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. கார் மோதிய வேகத்தில் நிலைகுலைந்து காங்கிரீட் கலவை இயந்திர வாகனம் கார்மீதே சரிந்து விழுந்தது. இதனால் கார் அப்பளம் போல நொறுங்கியது.
கலவை இயந்திர வாகனத்தை ஓட்டிச்சென்ற டிரைவர் உடனடியாக மீட்புப்படையினர்களுக்கு தகவல் கொடுத்தார். மீட்புப்படையினர் விரைந்து வந்து காரின் உள்ளே சிக்கிய இரண்டு இளம்பெண்களையும் வெளியே மீட்டனர். ஒரு பெண்ணுக்கு மட்டும் காலில் எலும்பு முறிந்துள்ளதாகவும், மற்றொரு பெண்ணுக்கு சிறிய காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளதாகவும் சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கபப்ட்டது.