இளையதளபதி விஜய் இன்று தனது 15வது திருமண நாளை கொண்டாடுகிறார்.
இளையதளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய், சங்கீதா என்ற இலங்கை தமிழ்ப் பெண்ணண கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சினிமாவில் தன்னுடைய வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் தனது மனைவி சங்கீதா என்று கூறும் விஜய், தன்னுடைய குடும்பத்தையும், குழந்தைகளையும் பொறுப்பாக கவனித்து வந்ததால்தான் தன்னால் நடிப்பில் முழுக்கவனம் செலுத்த முடிந்தது என்று கூறியுள்ளார்.
விஜய்- சங்கீதா தம்பதிகளுக்கு கோலிவுட்டின் பிரபல திரைநட்சத்திரங்கள் வாழ்த்து கூறிவரும் வேளையில் சென்னை டுடே நியூஸ் இணையதளமும், விஜய் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.