நாட்டின் அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக்கணக்கு. பிரதமரின் கனவு நனவாகிறது.

modiநாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும் என்ற பாரத பிரதமரின் கனவான “ஜந்தன் யோஜனா திட்டம்” நாளை மறுநாள் முதல் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தன் கைப்படவே அனைத்து வங்கி அதிகாரிகளுக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, “நாட்டில் உள்ள 15 கோடி ஏழை குடும்பங்களுக்கும் வங்கி கணக்கு தொடங்கி, ஏ.டி.எம் அட்டை வழங்கப்படும் என்றும், மேலும் அந்த வங்கிக்கணக்கின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் விபத்து காப்பீடு பாலிசி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அறிவிப்போடு நின்றுவிடாமல் செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டப்பட்டது. இதுதொடர்பாக நேற்று இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பிய இமெயிலில்,  இந்த பிரம்மாண்டமான திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும், முதல்கட்டமாக 7 கோடி குடும்பங்களை வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்தியாவில் வங்கிக்கணக்கு இல்லாத குடும்பங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே தனது லட்சியம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வங்கிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply