டெசோ கூட்டத்தில் ஸ்டாலின் – அழகிரி சமாதானப் பேச்சுவார்த்தை. கருணாநிதியின் நாடகம் அம்பலம்.

tesoதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள மு.க. ஸ்டாலினுடன் சமாதானப் பேச்சு பேசுவதற்காக கூடும் கூட்டமே டெசோ கூட்டம் என்றும் உண்மையில் இந்த கூட்டம் ஈழத்தமிழர்களின் நலனுக்காக கூட்டப்படுவது போன்ற நாடகம் நடத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க கருணாநிதியின் மகள் செல்வி தீவிர முயற்சி செய்து வருகிறார். கருணாநிதி, தயாளு அம்மாள், கனிமொழி மற்றும் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்திய செல்வி, மீண்டும் அழகிரியை கட்சியில் சேர்க்க தீவிர முயற்சியில் உள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தவிர அனைவரும் அழகிரியை கட்சியில் சேர்க்க ஒப்புகொண்டுள்ளதாக தெரிகிறது. எனவே ஸ்டாலினுடன் சமாதானப் பேச்சுவார்த்தை பேசுவதற்காகவே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மற்றும் சுப.வீரபாண்டியன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், பெயருக்கு டெசோ கூட்டம் என்றழைக்கப்படும் இந்த கூட்டத்தில் அழகிரி-ஸ்டாலின் சமாதானப்பேச்சுவார்த்தையே முக்கியமானதாக இருக்கும் என்றும் கட்சியினர் மத்தியில் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ‘தி இந்து’ பத்திரிகை இதுகுறித்து செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய டெசோ கூட்டம் முடிந்த பின்னர் இன்று மாலையோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களிலோ அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கும் அறிவிப்பு வெளிவரலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply