ஃபிளெட்சர்தான் எங்கள் பாஸ். ரவிசாஸ்திரி நியமனம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய தோனிக்கு பிசிசிஐ கண்டனம்.

dhoni-fletcher-indiaஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஃபிளெட்சர் தகுதி குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அணியின் கேப்டன் தோனிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தோனி தன் தகுதிக்கு மீறி கருத்து தெரிவித்து உள்ளதாகவும் இதுபோல கருத்துத் தெரிவிப்பவர் கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர்’ என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற புள்ளிக்கணக்கில் படுதோல்வியடைந்ததை ஒட்டி, இந்திய கிரிக்கெட் வாரியம் ரவி சாஸ்திரியை ஒருநாள் அணிக்கான இயக்குநராக நியமித்தது. மேலும் ஃபீல்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பியது.

ஆனால் ரவிசாஸ்திரி நியமனம் குறித்து நேற்று முன் தினம் கேப்டன் தோனி கருத்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதன் விவரம் வருமாறு:

இந்திய அணியை பொறுத்தவரை உலகக் கோப்பை போட்டி வரைக்கும் ஃபிளெட்சர்தான் எங்கள் பாஸ். ரவி சாஸ்திரிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது எனினும் ஃபிளெட்சர் அவர்களின் அதிகாரம் குறைந்து விட்டதாக நான் கருதவில்லை என தோனி தெரிவித்திருந்தார்.

தோனியின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அதோடு, அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர், தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் “இந்திய கேப்டன் என்ற முறையில் தோனி தன் தகுதிக்கு மீறி கருத்துத் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம், ஆனால், ஒரு முதிர்ச்சித்தன்மை நிறைந்த கேப்டன், தனது எல்லை எதுவென்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அதிகாரிகள் தேர்வு செய்ய முடியாது என்பதைப் போல, யார் இந்த பொறுப்பில் இவ்வளவு காலம் நீடிப்பர் என்பதையும், தோனி முடிவு செய்திட முடியாது. துணைப் பயிற்சியாளர்கள் நியமிப்பதும், அவர்களது பதவிக்காலத்தை நிர்ணயம் செய்வதும் தோனியின் கடமை அல்ல. நடந்தது ஏமாற்றம் அளிக்கிறது. அவர் கேப்டன் பதவிக்கு பொருத்தமற்றவர் போல கருத்துத் தெரிவித்துள்ளார்’ என்றார்.

Leave a Reply