பாஜக ஆட்சிமன்ற குழுவில் இருந்து வாஜ்பாய், அத்வானி, ஜோஷி நீக்கம். அமீத் ஷா எடுத்த அதிரடி முடிவு.

bjpபாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மன்ற குழுவில் இருந்து மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி மற்று முரளி மனோகர் ஜோஷி ஆகியோர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை பாஜகவின் புதிய தலைவராக சில நாட்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற மோடியின் நெருங்கிய நண்பர் அமீத் ஷா எடுத்துள்ளார்.

பாஜகவை வழிநடத்தும் ஆட்சி மன்ற குழுவில் மொத்தம் 12 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆட்சி மன்ற குழுவின் ஆலோசனையின்படி கட்சித்தலைவர்களும், எம்.பிக்களும் வழிநடத்தப்படுவார்கள். இத்தகைய அதிகாரம் படைத்த ஆட்சி மன்ற குழுவில் இருந்து நேற்று பாஜகவின் தலைவர் அமீத் ஷா, அவர்கள் வாஜ்பாய், அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவர்களையும் அதிரடியாக நீக்கியுள்ளார். இருப்பினும் அத்வானி மற்றும் ஜோஷி ஆகிய இருவரும் கட்சியின் கெளரவ ஆலோசகர்களாக தொடர்ந்து செயல்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய ஆட்சி மன்ற குழுவில் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, அனந்த்குமார், தவார்சந்த் கெலாட், சிவ்ராஜ் சிங் சவுகான், ஜகத் பிரகாஷ் நத்தா, ராம்லால், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான், கட்சியின் பொதுச் செயலாளர் ஜகத்பிரகாஷ் நத்தா  ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்களில் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் ஜகத் பிரகாஷ் நந்தா ஆகிய இருவரும் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply