5 மணிக்குள் ஆஜராகவிலை எனில் தீர்ப்பு தேதியை அறிவித்துவிடுவேன். ஜெயலலிதா வழக்கறிஞருக்கு நீதிபதி எச்சரிக்கை

jayaபெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று மாலைக்குள் ஜெயலலிதா வழக்கறிஞர் தனது வாதத்தை எடுத்துரைக்க வராவிட்டால் தீர்ப்பு தேதியை அறிவித்துவிடுவேன் என்று அதிரடியாக நீதிபதி அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் சுதாகரன், சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் மற்றும் ஜெயலலிதா, சசிகலா தரப்புகளின் இறுதி வாதம் முடிவடைந்துவிட்டது. சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பிலும் இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட கூடுதலாக 2 மணி நேரம் தனக்கு அவகாசம் வழங்குமாறு ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார், நீதிபதியிடம் சமீபத்தில் முறையிட்டார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று அவருக்கு 2 மணிநேரம் வாதாட அனுமதி கொடுத்தார்.

ஆனால் இன்று நீதிபதி அனுமதி கொடுத்த நேரத்தில் ஆஜராமாகல் கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கு வேறு வழக்கில் ஆஜராக சென்று விட்டார்.

இதனால், கடும் கோபம் அடைந்த நீதிபதி, இன்று மாலை 5 மணி வரை நீதிமன்றத்திலே இருக்கப்போவதாகவும் அதற்குள் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிடவில்லையென்றால் வழக்கின் தீர்ப்பு தேதியையும் அறிவித்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். நீதிபதியின் இந்த அதிரடி எச்சரிக்கையால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply