சீனத்தலைநகர் பீஜிங் நகருடன் 11 மாகாண தலைநகரங்களை இணைக்க கடலுக்கடியில் ரயில்பாதை.

undersea tunnelசீனத்தலைநகர் பீஜிங் நகரை சீனாவில் உள்ள அனைத்து மாகாண தலைநகரங்களோடு இணைக்க கடலுக்கடியில் ரயில்பாதை அமைக்க சீன ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 5700கிமீ தூர ரயில்பாதையை கடலுக்கடியில் அமைக்க வேண்டியதிருக்கும் என கூறப்படுகிறது.

வடகிழக்கு சீனாவில் இருந்து தெற்கு சீனாவில் உள்ள ஹைனன் மாகாணம் வரை உள்ள 11 மாகாணத் தலைநகரங்களை பீஜிங் நகருடன் இணைக்க கடலுக்கடியில் ரயில் பாதை அமைக்கப்பட இருக்கின்றது. இந்த பாதை அமைக்கப்பட்டுவிட்டால். சீனாவில் உள்ள எந்த மாகாணத் தலைநகரில் இருந்தும் சீனத்தலைநகர் பீஜிங் நகருக்கு அதிகபட்சமாக 8 மணிநேரத்தில் சென்றடைந்துவிடலாம் என சீன பொறியியல் அகாடமியின் ரயில்வே நிபுணரான வங் மெங்க்ஷு கூறியுள்ளார்.

 ஒரு நாட்டின் ரெயில்வே துறை வளர்ச்சிதான் அந்த  நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றை நிலைப்படுத்தும் என்று கூறியுள்ள சீனப் பிரதமர் லி கிகியாங், ரயில்வே துறையில்  தனியார் முதலீடுகளை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்.

Leave a Reply