நெல்லை, கோவை, தூத்துக்குடி மாநகராட்சிகளின் மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு.

coimbatoreதமிழகத்தில் காலியாக உள்ள 3 மேயர் பதவிகளுக்கும் மற்றும் ஒருசில நகரசபை தலைவர் பதவிகளுக்கும் வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பா.ஜோதி நிர்மலா நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளும், அரக்கோணம், விருத்தாசலம், கடலூர், சங்கரன்கோவில் ஆகிய நகரங்களின் நகராட்சி தலைவர் பதவிகளும், மற்றும் ஊரக, நகர்ப்புறங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்றும், செப்டம்பர் 18தேதி தேர்தலும், 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply