ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசை: இந்தியா மீண்டும் முதலிடம்

indiaஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் இந்தியா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பை  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நேற்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் போட்டியை 1-3 என்ற கணக்கில் மோசமாக இழந்தலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. அதே நேரத்தில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி ஜிம்பாவே அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் ஆஸ்திரேலிய முதலிடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசை பட்டியலின் முழு விபரம்:

1.  இந்தியா                   114 புள்ளிகள்
2. தென்னாப்பிரிகா     113 புள்ளிகள்    
3. இலங்கை                 111 புள்ளிகள்
4. ஆஸ்திரேலியா       111 புள்ளிகள்
5. இங்கிலாந்து            106 புள்ளிகள்
6. பாகிஸ்தான்             100 புள்ளிகள்    
7. நியூசிலாந்து               98 புள்ளிகள்    
8. வெஸ்ட் இண்டீஸ்    96 புள்ளிகள்    
9.பங்களாதேஷ்             69 புள்ளிகள்    
10. ஜிம்பாவே                 58 புள்ளிகள்        

இந்த வாரத்தில் இன்னும் ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் முடிவுகளை பொறுத்து தரவரிசைப்பட்டியலில் மாற்றம் வரலாம்.

முதலிடத்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில், இங்கிலாந்துக்கு எதிராக உள்ள ஏனைய இரு போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டும்.அதேவேளையில், தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறவேண்டும். 

Leave a Reply