இரண்டு நாட்கள் கழித்து பிணவறையில் எழுந்து உட்கார்ந்த இறந்த இளைஞர். உ.பியில் பெரும் பரபரபு.

up dead manஉத்தரபிரதேசம் மாநிலத்தில் மயக்கமாகி இருந்த ஒருவரை இறந்துவிட்டதாக கருதி  பிணவறையில் வைத்துள்ளனர். ஆனால் அவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் உயிரோடு எழுந்து உட்கார்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உ.பி மாநிலத்தில் உள்ள  அலிகார் மாவட்டத்தில் சாலை ஒன்றில் மயக்கமாகி இருந்த இளைஞர் ஒருவரை போலீஸார் கொண்டு வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர், அந்த இளைஞர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு, போலீஸார் இறந்த உடலைக் காண வந்த போது, அந்த இளைஞர் உயிரோடு எழுந்து உட்கார்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர் பிணவறையில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையில் அவரை பரிசோதித்த மருத்துவர் கவனக்குறைவாக இறந்துவிட்டதாக தெரிவித்தது உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Leave a Reply