வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி. முதல்வர் அறிவிப்பு

கடந்த 2ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் jayaவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ரஞ்சித் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”ஜம்மு காஷ்மீர் மாநிலம், 41 ராஷ்டிரிய ரைப்பில்ஸ், 28 காலாட்படை பிரிவில் சிப்பாயாக பணி புரிந்து வந்த, திருவண்ணாமலை மாவட்டம், சு.கம்புப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராயர் என்பவரின் மகன் ரஞ்சித் கடந்த 2ஆம் தேதி குப்வாரா மாவட்டத்தில் ஆப்ரேஷன் ரக்க்ஷா தொடர்பாக படை வீரர்களை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு இடமாற்றம் செய்யும் போது, வீரமரணம் எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

வீர மரணம் எய்திய ரஞ்சித்தை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வீர மரணம் அடைந்த ரஞ்சித்தின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply