உலக மக்கள் தொகையை மிஞ்சும் செல்போன்களின் எண்ணிக்கை. ஆய்வில் தகவல்

cellphonesஉலகின் மொத்த மக்கள் தொகை 700 கோடி. ஆனால் உலகில் பயன்படுத்தப்படும் செல்போன்களின் எண்ணிக்கை வரும் டிசம்பர் மாதத்திற்குள் 730 கோடியாக உயரும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று இன்று தெரிவித்துள்ளது.

இன்றைய நிலையில் உலகில் உள்ள பல நாடுகளில் அந்தந்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட அவர்கள் பயன்படுத்தும் செல்போன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், சராசரியாக ஒருவர் இரண்டு செல்போன்களை பயன்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த வருட இறுதிக்குள் உலக மக்கள் தொகையை செல்போன் எண்ணிக்கை மிஞ்சிவிடும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

ரஷ்யாவின் மக்கள் தொகை எண்ணிக்கையை விட செல்போன்களின் எண்ணிக்கை 1.8 மடங்கு அதிகமாக இருக்கின்றது என்று அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் சீனாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 4G உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 700 மில்லியனை தாண்டிவிடும் என்றும், இது உலக அளவில் 4G உபயோகிப்பவர்களில் 25% என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

Leave a Reply