தமிழக சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 162 சிவில் நீதிபதி பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட இருக்கிறார்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விளம்பர எண்: 15/2014
பணி: சிவில் நீதிபதி (பதவி கோடு: 2089)
காலியிடங்கள்: 162
சம்பளம்: மாதம் ரூ.27.700 – 44,770
வயதுவரம்பு: 22 – 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு சட்டப் படிப்பை முடித்து இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும். பொது பிரிவு சேராதவர்களுக்கு 5 மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படும்.
வயதுவரம்பு சலுகை: விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 26.08.2014 தேதியின்படி நிர்ணயிக்கப்படும். கடந்த கல்வியாண்டில் அதாவது (2013 – 2014)ல் சட்டப்ப படிப்பை முடித்த இளம் பட்டதாரிகளுக்கு வயதுவரம்பு சலுகை கிடையாது. ஏற்கனவே சட்டப் படிப்பை முடித்து நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி கொண்டிருப்பவர்களில் பொது பிரிவினருக்கு 35 வரையிலும், இதர பிரிவினருக்கு 40 வயது வரையிலும் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.10.2014 மற்றும் 19.10.2014
எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம்: ரூ.175. இதனை ஆன்லைன் ஆல்லது ஆஃப்லைன் முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.