தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்.

iasதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ”தொழிலாளர் நலத்துறை ஆணையராக பணிபுரிந்து வந்த வீர சண்முக மோனிக்கு பதிலாக உள்துறையில் தனிச்செயலராக பணியாற்றி வந்த அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, சுற்றுலத்துறை ஆணையராக கூடுதல் பொறுப்பில் இருந்த ஆர்.கண்ணனுக்கு பதிலாக ஹர் சகாய் மீனாவும், தொழில்முனைவோர் வளர்ச்சி மைய இயக்குநராக ஸ்மிதா நாகராஜ்ஜூம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த, லதா தொழிற்துறை இணை செயலாளராககவும்,  இந்திய மருத்துவம், ஹோமியோபதி ஆணையராக இருந்த சந்தோஷ் பாபு, கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழக இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply