குஜராத் கலவரத்திற்கும் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆஸ்திரேலிய பிரதமர்

modi and aboottகுஜராத் கலவரத்துக்கு நரேந்திர மோடியை காரணம் சொல்லக் கூடாது என்று இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நேற்று பிரபல தொலைக்காட்சி ‘ஹெட்லைன்ஸ் டுடே’  ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ‘மோடி முதல்வராக 2002-ம் ஆண்டு இருந்தபோது நடந்த குஜராத் கலவரம் பற்றி கருத்து கேட்டபோது, ” 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்துக்கும் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை குற்றம் சொல்வது சரியானது அல்ல. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை அவர் மாநிலத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பொறுப்பில் இருந்த ஒரு தலைமை அதிகாரி; அவ்வளவுதான்.

இந்த கலவரம் குறித்து மோடி மீது முடிவற்ற ஏராளமான விசாரணைகள் நடத்தப்பட்டு உள்ளது. அவை அனைத்திலும் அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்படு விடுவிக்கப்பட்டு உள்ளார். எனவே, என்னைப் பொறுத்தவரை இவைகளே போதுமானவை. சில நேரங்களில் எங்களைப் போன்றவர்கள் தலைமை பதவிக்கும் நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதனால் நாட்டில் பயங்கரமான நிகழ்வுகள் நடக்கும்போது தலைமை பதவி வகிப்பவரை குற்றம் சாட்டக் கூடாது” என்று கூறினார்.

Leave a Reply