துடிப்புடன் உழைத்து, வாழ்வில் வளம் பெறும், மேஷ ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு தன, சப்தமஸ்தான அதிபதியாகிய சுக்கிரன் அனுகூலமாக உள்ளார். ஆறாம் இடத்தில் உள்ள ராகு, புதன் இரு மடங்கு நற்பலன் தருவர். பழகுபவரின் வாழ்வியல் சூழ்நிலை உணர்ந்து பேசுவீர்கள். கை நழுவிப்போன வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக வந்து சேரும். வாகன பயன்பாடு அளவுடன் மேற்கொள்வீர்கள்.புத்திரரின் பணிவு நிறைந்த குணம், மனதில் நெகிழ்ச்சி தரும். உடல் நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணையின் நல்ல கருத்துகளை ஏற்பீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய யுக்தி பின்பற்றுவது அவசியம். பணியாளர் பொறுப்பு உணர்ந்து பணிபுரிவது நல்லது. பெண்கள், குடும்பத்தின் அவசியத் தேவை நிறைவேற்றுவர். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதல் தவறாமல் பின்பற்றவும்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதுடன் வேத சாஸ்திரம் பயிலும், மாணவர்களுக்கு உதவலாம்.
நடை, உடை, செயலில் வசீகரம் விரும்பும்,ரிஷப ராசிக்காரர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன், நான்காம் இடமான கேந்திர ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளார். சனி, கேது கூடுதல் நற்பலன் தருவர். எவரிடமும், நட்பு மனப்பாங்குடன் பழகுவீர்கள். உடன் பிறந்தவரின் முக்கிய தேவை நிறைவேற உதவுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர், சில விஷயங்களில் மனக்கிலேசம் அடைவர். எதிரியால் உருவாகிற தொந்தரவு பலமிழக்கும்.இல்லறத்துணை உங்களின் நல்ல குணம் பாராட்டுவார். தொழிலில் முன்னேற்றம் உருவாக, புதியவர்களின் வரவு துணை நிற்கும். பணியாளர் சிறப்பாக செயல்பட்டு, நன்மதிப்பு சலுகை பெறுவர். பெண்கள், உறவினர்களிடம் பெற்ற நற்பெயர் பாதுகாத்திடுவர். மாணவர்கள், பயனற்ற கருத்து பேசுபவரிடம் விலகுவது நல்லது.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுடன், கொண்டக்கடலை தானம் வழங்கலாம்.
பிறர் கருத்தின் நியாயம் உணர்ந்து செயல்படும்,மிதுன ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு ராகு, சனி, கேது தவிர, மற்ற கிரகங்கள் வியத்தகு அளவில் நற்பலன் தருகின்றனர். பணவரவு திருப்திகர அளவில் கிடைக்கும். உங்களை புறக்கணித்தவர் அன்பு பாராட்டுவார். புதிய பணிகளை ஆர்வமுடன் துவங்குவீர்கள். குடும்பத்தில் மங்களம், மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புத்திரரின் செயல் கண்காணித்து வழி நடத்துவது நல்லது. எதிரி உங்கள் வழியாக, சில அனுகூலம் பெற முயற்சி மேற்கொள்வார்.இல்லறத்துணையின் அக்கறை மிகுந்த சொல் வாழ்வில், புதிய மாற்றம் தரும். தொழில், வியாபாரத்தில் உருவான வளர்ச்சிக்கு, உதவியவர்களை பாராட்டுவீர்கள். பணியாளர், பணி இலக்கு எளிதாக நிறைவேற்றுவர். பெண்கள், புத்தாடை அணிகலன் வாங்க நல் யோகம் உண்டு. மாணவர்கள், முயற்சியுடன் படித்து முன்னேற்றம் காண்பர்.
சந்திராஷ்டமம்: 6.9.14 நள்ளிரவு 12:01 மணி முதல்7.9.14 இரவு 7:31 மணி வரை.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், வெண்ணெய் சாற்றி பிரசாதம் வழங்கலாம்.
பரந்த மனதும், உழைப்பில் ஆர்வமும் நிறைந்த, கடக ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு சுக்கிரன், ராகுவின் அமர்வு மட்டுமே நற்பலன் தரும் வகையில் உள்ளது. முக்கிய செயல் நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். உங்கள் சொல்லுக்கு வரவேற்பு தருபவர்களிடம் மட்டும், மனம் திறந்து பேசலாம். இளைய சகோதரர் பாசத்துடன், தேவையான உதவி வழங்குவர். வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.புத்திரர் உடல் நலத்திற்கு, ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம் என, ஆலோசனை சொல்லுங்கள். முரண்பாடு உடையவரை எளிதில் நம்ப வேண்டாம். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சி தரும். தொழிலில் அளவான மூலதனம் அதிக உழைப்பு நன்மை தரும். பணியாளர் தம் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இனிய வார்த்தை பேசுவர். மாணவர்கள் வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
சந்திராஷ்டமம்: 7.9.14 இரவு 7:32 மணி முதல்9.9.14 இரவு 9:56 மணி வரை.
பரிகாரம்: தன்வந்தரி பகவானை வழிபடுவதுடன், ஏழை முதியவரின் மருத்துவத்திற்கு உதவலாம்.
மனதில் துணிச்சலும், கூடுதல் செயல்திறனும் உள்ள, சிம்ம ராசிக்காரர்களே!
உங்கள் ராசியில் சுக்கிரன், ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ள, சனி நற்பலன் தருகின்றனர். மற்ற கிரகங்கள், எதிர்மறை பலன் தருவதாக உள்ளது. ஆடம்பரம் தவிர்ப்பதால், பணச்செலவு குறையும். மனதில் உள்ள விரக்தியை, பிறரை குறை சொல்ல பயன்படுத்த வேண்டாம். உடன் பிறந்தவரால் உதவி உண்டு. வாகனத்தில் பராமரிப்பு பயணமுறையை எளிதாக்கும்.புத்திரரின் தேவையை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். எதிரி, உங்கள் மீது நல் அபிப்பிராயம் கொள்ள, புதிய சூழ்நிலை உருவாகும். இல்லறத்துணை குடும்ப நலன் பேணுவதில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் சராசரி அளவில், பணவரவு தரும். பணியாளர் தற்காப்பு உணர்வுடன் பணிபுரிவது நல்லது. பெண்கள் சேமிப்பு பணத்தில், வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், சுறுசுறுப்பாக செயல்படுவர்.
சந்திராஷ்டமம்: 9.9.14 இரவு 9:57 மணி முதல்11.9.14 இரவு 1:31 மணி வரை.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதுடன்,பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தி, பிரசாதம் வழங்கலாம்.
அன்பின் சக்தியை உணர்ந்து வரவேற்கும்,கன்னி ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு செவ்வாய், குரு சுக்கிரனின் அமர்வு, நற்பலன் தரும் இடங்களில் உள்ளது.
அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். பேசும் வார்த்தையில் நிதானம் நற்பெயரை பாதுகாக்கும். முருகப்பெருமானின் நல்லருள் வெகுநாள் எதிர்பார்த்த நன்மையை பெற்றுத்தரும். வீடு, வாகனத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள்.புத்திரர், பெற்றோர் சொல்படி நடந்து கொள்வர். ஊட்டம் நிறைந்த உணவு உண்பதால், ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணை உங்களின் நல்ல குணம் பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் போட்டியை, மாற்று உபாயத்தினால் சரி செய்ய வேண்டும். பணியாளர் கவனச்செயலால் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். பெண்கள், பணச்செலவில் சிக்கனம் மேற்கொள்வீர்கள். மாணவர்கள், பொது அறிவு வளர்த்துக் கொள்வர்.
சந்திராஷ்டமம்: 11.9.14 இரவு 1:32 மணி முதல்13.9.14 அன்று நாள் முழுவதும்
பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதுடன், கண்பார்வை குறைபாடு உள்ளவர்க்கு உதவலாம்.
சிறு செயலையும் கலையம்சத்துடன் நிறைவேற்றும் துலாம் ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் கேது, லாபஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். செயல்களில் ஆதாயம் தேடுகிற மனப்பாங்கு ஏற்படும். அரசு தொடர்பான உதவி கிடைக்க காலம் கனிந்து வரும். பேச்சில் உற்சாகம் மிகுந்திருக்கும். உறவினர் வருகை சிலமாற்றுத்திட்டம் உருவாக்க உதவும்.புத்திரரின் விருப்பம் பூர்த்தி செய்வதில் அக்கறை கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்தி நம்பிக்கை பெறுவீர்கள். இல்லறத்துணை நல்ல ஆலோசனை சொல்வார். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் தொடர்பு கிடைத்து நன்மை தரும். பணியாளர், தொழில்நுட்ப அறிவு வளர்த்துக் கொள்வர். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், மனத் தெளிவுடன் படித்து முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு நடத்துவதுடன் கோவில் திருப்பணிக்கு உதவலாம்.
எந்த சூழ்நிலையையும் பக்குவமாக எதிர்கொள்ளும் விருச்சிக ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு குரு, சூரியன், ராகு, புதன் அனுகூலமாக உள்ளனர். புதன் வீட்டில் உள்ள ராகு, உச்ச பலம் பெற்று புதன் தரும் நற்பலனுக்கு இணையாக தானும் தருவார். பேசும்வார்த்தை பிறர் மனம் வசீகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்.புத்திரர் நண்பருக்கு இணையான அன்புடன் பழகுவர். செவ்வாய் ஆட்சிபலத்துடன் ராசியில் குருபார்வை பெற்றுள்ளார். இதனால், உடல்நலம் ஆரோக்கியம் பெறும். இல்லறத்துணையிடம் கருத்து வேறுபாடு வராத அளவில் பேசவும். தொழில், வியாபாரம் செழித்து ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர்கள், சலுகை பெறுவர். பெண்கள், உறவினர்களுக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதுடன், கோவில் யானைக்கு பழவகைகள் கொடுக்கலாம்.
மனதில் முழு நம்பிக்கையுடன் பணி மேற்கொள்ளும் தனுசு ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன், சனிபகவானின் அமர்வு சிறப்பாக உள்ளது. முன்யோசனையுடன் பணிபுரிந்து முழுஅளவில் நன்மை பெறுவீர்கள். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி துணை நிற்கும். இளைய சகோதர வகையில் மங்கல நிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. உறவினர்களை உபசரிப்பதில் அக்கறை கொள்வீர்கள்.புத்திரரின் பிடிவாத குணம் மனதை வருத்தும். எதிரியால் உருவாகிற கெடுசெயல் பலமிழக்கும். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர் உதவுவர். தொழிலில் அபிவிருத்தி காண்பீர்கள். பணியாளர்கள், சிறப்பாக செயல்பட்டு நற்பெயர், வெகுமதி பெறுவர். பெண்கள், புத்தாடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், அக்கறையுடன் படித்து நல்ல தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதுடன், பால்பாயாசம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்.
நட்பின் பெருமையை உணர்ந்து மதிக்கும் மகர ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு குரு, சுக்கிரன், செவ்வாய், கேது நற்பலன் தருவர். நற்குணம் உள்ளவரின் அன்பு, ஆசி கிடைக்கும். பணியில் ஒருமுகத்தன்மையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கலம், சுபிட்சம் நிறைந்திருக்கும்.புத்திரர் நற்செயல்களால் பெருமை தேடித்தருவர். எதிரியால் வரும் மறைமுக இடையூறு உங்களின் சமயோசித செயலால் விலகும். இல்லறத்துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் புதிய இலக்கை அடைவீர்கள். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பை விருப்பமுடன் ஏற்றுக்கொள்வீர்கள். பெண்கள், சேமிப்பின் அவசியத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்த்துவர். மாணவர்கள், ஆரோக்கிய உடல்நலம் அமைந்து படிப்பில் சிறந்து விளங்குவர்.
பரிகாரம்: காமதேனுவை வழிபடுவதுடன், பசுவுக்கு நீரில் நனைத்த பச்சரிசிவெல்லம் கலந்து வழங்கலாம்.
வாழ்வில் பெற்ற அனுகூலம் போற்றி பாதுகாத்திடும் கும்பராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு அஷ்டமஸ்தானத்தில் உள்ள புதன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். பணிகளில் நிதானம், அறிவுப்பூர்வம் பின்பற்றுவதால், சிரமம் தவிர்க்கலாம். பழகுபவர்களின் எண்ணம் உணர்ந்து பேசுவது நல்லது. வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.புத்திரர் மகிழ்ச்சிகர மனதுடன் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். இல்லறத்துணையின் கருத்துக்கு உரிய முக்கியத்துவம் தரவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். இயந்திர பிரிவு பணியாளர்கள், பாதுகாப்பை தவறாமல் பின்பற்றவும். பெண்களுக்கு, சமையலறை பணிகளில் கூடுதல் கவனம் அவசியம். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதுடன், சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து பிரசாதம் தரலாம்.
புதிய பணிகளை தாமதமின்றி நிறைவேற்றுகின்ற மீனராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு ஐந்தில் உச்சம் பெற்ற குரு, ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற சூரியன் நற்பலன் வழங்குகின்றனர். சமூக நிகழ்வுகளின் போக்கு உணர்ந்து எவரிடமும் பழகுவீர்கள். சுபநிகழ்வு உருவாகி புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தவர் சிறுஅளவிலான உதவி எதிர்பார்த்திடுவர். பணியின் காரணமாக சிலர், வீடு, இடமாற்றம் செய்ய நேரிடலாம்.புத்திரர் நல்ல நண்பர்களின் அறிமுகத்தினால் பெருமிதம் கொள்வர். நோய் தொந்தரவு குறையும். இல்லறத்துணையின் செயல் குறையை கண்டிப்பதில், நிதானம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அனுகூல காரணி பலம் பெறும். பணியாளர்கள், தம் கடமை உணர்ந்து செயல்படுவீர்கள். பெண்கள், புதியவர்களிடம் நிதானித்து பேசுவது நல்லது. மாணவர்கள், ஆர்வமிகுதியால் தகுதி மீறிய செயலில் ஈடுபடக்கூடாது.
பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபடுவதுடன், மேளம் இசைக்கும் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவலாம்.