நிகாராகுவா நாட்டின் தலைநகரில் திடீரென ராட்சத விண்கல் ஒன்று விழுந்து 39 அடியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிகாராகுவா நாட்டின் தலைநகர் மனாகுவா என்ற நகரின் அருகே மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று நேற்று விழுந்துள்ளது. மனாகுவா விமான நிலையத்தை அருகேயுள்ள காட்டுப்பகுதியில் பயங்கரமான தீப்பிழம்பாக விழுந்த இந்த விண்கல் விழுந்ததால் சுமார் 39 அடி குறுக்களவில் பிரமாண்டமான பள்ளம் உண்டாகியுள்ளது. இந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் நல்லவேளையாக எவ்வித உயிர்ச்செதமும் ஏற்படவில்லை. ஆனால் விண்கல் விழுந்த அதிர்ச்சியால் அந்த பகுதியில் பூகம்பம் ஏற்பட்டதை போன்ற அதிர்வு ஏற்பட்டது. நிலநடுக்கத்தை அளவீடு செய்யும் கருவியிலும் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாக நிகாராகுவா நாட்டு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விண்கல்லினால் அருகில் இருந்த விமான நிலையத்திற்கும் விமானங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை., இந்த பள்ளத்தை பார்க்க அந்த பகுதியில் உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.