ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதி. ஜெயலலிதா அறிவிப்பு.

kashmir floodஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு சுமார் 160 பேர் வரை இதுவரை பலியாகியுள்ளனர். இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ரு.5 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்த நிதி வழங்கப்படும் என்றும் தேவைப்பட்டால் தமிழகத்தில் இருந்து மீட்புப்பணிக்கு தேவையான உதவிகள் செய்யவும் தமிழக அரசு தயாராக உள்ளது என முதல்வர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.1000 கோடியை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழக முதல்வரின் நிதி அறிவிப்பினை தொடர்ந்து பல மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலத்தின் சார்பில் ஜம்மு காஷ்மீருக்கு நிவாரண நிதி வழங்க ஆலோசனை செய்து வருகின்றனர்.

Leave a Reply