உகாண்டாவில் 4 கால்கள், 4 கைகளுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை.

baby 1 copyஉகாண்டா நாட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை, நான்கு கைகளும், நான்கு கால்களும் கொண்டுள்ளது. மருத்துவர்களின் தீவிர முயற்சியால் அந்த குழந்தையின் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் அகற்றப்பட்டு தற்போது அந்த குழந்தை இயல்பான நிலையில் உள்ளது.

கிழக்கு உகாண்டா நாட்டில் உள்ள நபிஜிங்கோ என்ற கிராமத்தில் பால் முகிசா என்ற பெண் குழந்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பிறந்தது. இந்த குழந்தை பிறக்கும்போதே நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களை கொண்டிருந்தது. இரட்டைக்குழந்தையாக உருவாக வேண்டிய குழந்தைகள் மருத்துவ கோளாறினால் இவ்வாறு பிறந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த குழந்தையின் இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் தனியே அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க உகாண்டா தலைநகர் காம்பாலா நகரில் உள்ள முலாகோ மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்தனர். மூன்று மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் அதிகப்படியாக இருந்த இரண்டு கால்களும், கைகளும் அகற்றப்பட்டு தற்போது இந்த குழந்தை நார்மலாக உள்ளது. இந்த குழந்தையின் பெற்றோர் தற்போது பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply