நேற்று முன் தினம் கத்தி படப்பிடிப்பின் இடையே திடீரென உடல்நலமின்றி பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கோலிவுட் பிரபலங்கள் மருத்துவமனையில் சந்தித்து அவரது நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
அஜீத், விஜய் மற்றும் சூர்யா ஆகிய மூன்று கோலிவுட் முன்னணி நடிகர்களும் மருத்துவமனைக்கு சென்று ஏ.ஆர்.முருகதாஸின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. புட் பாய்சன் மற்றும் அஜீரண கோளாறு காரணமாகவே முருகதாஸ் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. விஜய், அஜீத், சூர்யா ஆகிய மூவருமே முருகதாஸ் இயக்கத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் மூன்று பிரபல நடிகர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்ததால் மருத்துவமனை வட்டாரங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு அடைந்ததாக கூறப்படுகிறது.