இலங்கையில் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் சென்னையில் கைது.

arrestஇலங்கையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவாளி ஒருவர் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பினரால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அருண் செல்வராஜ் என்பவர் தமீம் அன்சாரி வழக்கில் தொடர்புடையவர் என்று கூறியுள்ள தேசிய புலனாய்வு அமைப்பினர், அவரிடம் இருந்து இலங்கை, இந்திய பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினர்.

இவர் இணையதளங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு பல ரகசிய தகவல்கள் பறிமாறியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அருண் செல்வராஜ்  ராணுவ பயிற்சி முகாம், கடற்படை தளம் ஆகியவற்றை நோட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது குறித்து அரசு முடிவு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply