ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்ற காந்தி பேரனுக்கு அழைப்பு.

gopal krishna gandhiகடந்த பல வருடங்களாக பிரிட்டனுடன் ஒன்றாக இருந்து வந்த ஸ்காட்லாந்து, தனி நாடாக பிரிய செப்டம்பர் 18ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்த உள்ளது. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் 30-ம் தேதியன்று ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் சிறப்புறை நிகழ்த்த மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஷ்ண காந்தி ஸ்காட்லாந்து நாட்டின் எம்.பிக்கள் குழுவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.

‘சுதந்திர கனவு மற்றும் உண்மை நிலவரம்’ என்ற தலைப்பில் அவரை பேச வருமாறு ஸ்காட்லாந்து நாட்டு பாராளுமன்றம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.  மேலும் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் “இந்தியா மையம்” என்ற அமைப்பு தொடங்கவுள்ளது. சரியாக மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி இந்த அமைப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடக்கவிழாவிலும் காந்தி பேரன் கலந்து கொள்கிறார்.

18-ம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து தனித்து பிரிந்தால், ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் பேசும் முதல் இந்தியர் என்றபெருமையை காந்தியின் பேரன் கோபால் கிருஷ்ண காந்தி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply