பெரு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் 7 குழந்தைகள் உள்பட 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பெரு நாட்டில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஒரு முக்கிய கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டில் உள்ள சால்ஹுவான்கா என்ற இடத்திற்கு பல்வேறு வகையான வாகனங்களில் வந்துகொண்டுள்ளனர்.
இந்த கோவிலுக்கு நேற்று வந்து கொண்டிருந்த ஒரு பேருந்து ஆபத்தான வளைவு ஒன்றில் திரும்பும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 650 அடி உயரமுள்ள மலைப்பாதையில் இருந்த பேருந்து உருண்டு விழுந்தது. இதனால் இதில் பயணம் செய்த 7 குழந்தைகள் உள்பட 26 பேர் மாண்டனர்.
விபத்திற்கு மோசமான சாலைகளே காரணம் என கூறப்படுகிறது. மேலும் டிரைவர்களுக்கு குறைந்த சம்பளமே இங்க் கொடுக்கப்படுவதால், அனுபவம் இல்லாத டிரைவர்களே இந்த வேலைக்கு வருகின்றனர்
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பெரு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.