கடந்த திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட வகையில் முறைகேடு நடைபெற்றது குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு கமிஷன் முன், வரும் 18ஆம் தேதி ஆஜராக வேண்டுமென தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு கடந்த ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி இந்த கட்டிடம் மிகக்குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கட்டடம் உறுதியாக இல்லை என்றும், கட்டடம் கட்டப்பட்டதில் ஏகப்பட்ட முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை, கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு அமைத்தது.
இதுகுறித்து விசாரணை செய்து வரும் ஒருநபர் விசாரணை கமிஷன், இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளது. கடந்த 11ஆம் தேதி விசாரணை கமிஷன் முன், ஆஜராக கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அன்றைய தினம் கருணாநிதியின் வழக்கறிஞர் வழக்கறிஞர் நீலகண்டன், மட்டுமே ஆஜரானார். இதனால்
வரும் 18ஆம் தேதி விசாரணை விசாரணை கமிஷன் முன் நேரில் ஆஜராக கருணாநிதிக்கு சம்மன் அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.