இந்திய பெருங்கடலில் 58 மர்ம பொருட்கள் கண்டுபிடிப்பு. MH370 விமானத்தின் பாகங்களா?

MH 370கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசிய விமானம் MH370 என்ற விமானம் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் மாயமாய் மறைந்து போனது. அந்த விமானமும், அதில் இருந்த 239 பயணிகளும் என்ன ஆனார்கள் என்று இன்று வரை தெரியவில்லை. இந்நிலயில் விமானத்தை தேடும் ஆஸ்திரேலிய மீட்புக்குழுவினர் இந்திய பெருங்கடலில் இருந்து 58 கடினமான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். அந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் உதிரி பாகங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது அந்த பாகங்கள் அனைத்தும் கோலாலம்பூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், கண்டுபிடிக்கப்பட்டு உள்ள அந்த 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாக தெரியவில்லை எனபதினாலே இந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் உதிரி பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பொருட்கள் விமானத்தின் பாகங்கள் என உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதி முழுவதிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படும் என மீட்புக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply