இன்று மாலை 5 மணியுடன் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு. பெரும் பரபரப்பு.

TASMACதமிழகத்தில் காலியாகவுள்ள மாநகராட்சி மேயர் பதவி மற்றும் நகராட்சி தலைவர்கள் பதவிகளுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுவதையடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன்காரணமாக இன்று மாலை 5மணி முதல் 18ஆம் தேதி 5 மணி வரை  டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் செப் 22ஆம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலையுடன் டாஸ்மாக் மூடயிருப்பதால் இன்று டாஸ்மாக் கடைகளில் அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டாஸ்மாக் சரக்குகளை அதிகளவில் வாங்கி பதுக்கும் வேலைகளும் இன்று நடக்கும். தேர்தல் நாளில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply