சென்னை பெண்ணுக்கு 5.2 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை.

chennai babyசென்னையை சேர்ந்த வில்லிவாக்கம் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தையின் எடை 5.2 கிலோ எடை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த ஆண் குழந்தை தற்போது நலமாக உள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்பவரது மனைவி 30 வயது சங்கீதா ஆவார். இவர் பிரசவத்துக்காக வில்லிவாக்கத்தில் உள்ள WCF என்ற மருத்துவமனையில் நேற்று முன் தினம்அனுமதிக்கப்பட்டார். சங்கீதாவுக்கு செப்.11ஆம் தேதியே குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட தேதியை தாண்டியும் குழந்தை பிறக்காததால்,  தாயின் உடல்நலன் கருதி குழந்தையை அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து மருத்துவமனையின் மகப்பேறு, மகளிர் சிறப்பு மருத்துவர் டாக்டர் டி. ராஜசேகர் தலைமையில் மருத்துவ குழுவினர் சங்கீதாவுக்கு திங்கள்கிழமை நள்ளிரவு அறுவைச் சிகிச்சை செய்தனர். நள்ளிரவு 12.15 மணிக்கு சங்கீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் எடை 5.2 கிலோ இருந்தது. வழக்கமாக பிரசவத்தின் போது பிறக்கும் குழந்தையின் எடையை விட இந்தக் குழந்தையின் எடை கிட்டத்தட்ட இருமடங்காக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply