புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டி. இலங்கை ராணுவம் காரணமா?

posterஇலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி மருத்துவரும், யாழ்ப்பாணம் பகுதியின் மனித உரிமைகள் செயலாளருமான ராஜனி திராணகம அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது 25வது நினைவு தினம் இன்றும் நாளையும் யாழ்ப்பாணத்தில் அனுசரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய இடங்களில் திடீரென மர்ம நபர்களால் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ”கொடிய எல்.டி.டி.ஈ. பயங்கரவாதிகளினால் 1989 செப்டெம்பர் 21ஆம் திகதி அன்று சுட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவரான ராஜனி திராணகமவின் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டிகளை இலங்கை ராணுவத்தினர்களே ஒட்டியிருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

Leave a Reply