உலகின் சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியல். தமிழகத்தின் இந்திரா நூயி 3வது இடம்.

Indra-Nooyi2சமீபத்தில் போர்ட்டியூன் (Fortune) என்ற இணையதளம் உலகின் சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவர் பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல் நேற்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஜி.பி.எம். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டி முதலாவது இடம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா உள்ளார்.

இந்த பட்டியலின் மூன்றாவது இடத்தில், இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயி (58) இடம் பெற்றுள்ளார். தமிழ் நாட்டில் பிறந்த இந்திரா நூயி, கடந்த 1994ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் சேர்ந்தார். இதன் பிறகு படிப்படியாக உயர் பதவிகளை எட்டிய அவர், இன்று பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். மேலும், அமெரிக்க வர்த்தக நிர்வாகியாகவும் இந்திரா நூயி உள்ளார்.

இந்த பட்டியலில் கடந்த வருடம் ஐந்தாவது இடத்தில் இருந்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ ஷெரில் சாண்ட்பெர்க் இந்த வருடம் பத்தாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply