சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் தலைமைச் செயலக வளகாத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் எரியும் தீயை அணைக்க, 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமை செயலகத்தில் உள்ள தொழிலாளர் நலன், பயிற்சித்துறை செயல்படும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த் தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.