ஆந்திராவில் உள்ள தனது அரசு சத்தீஸ்கர் அரசுடன் இணைந்து செயல்படப் போவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது ஒருநாள் பயணமாக சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய தலைநகரான நயா ராய்பூருக்கு சென்றார். அங்கு சட்டீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங்குடன் அவர் இருமாநில உறவு குறித்து ஆலோசனை செய்தார். பின்னர் சட்டீஸ்கர் முதல்வருடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். சட்டீஸ்கரின் புதிய தலைநகர் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருப்பதாக சந்திரபாபு நாயுடு அப்போது பாராட்டு தெரிவித்தார்.
ஆந்திராவில் புதிய தலைநகரை உருவாக்கும் போது ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் சட்டீஸ்கர் முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாக அவர் கூறிய சந்திரபாபு நாயுடு, சாலை,ரயில்,மற்றும் வான்வழி போக்குவரத்தில் இருமாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தவும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் குறிபிட்டார். எரிசக்தி, பொதுப்பணி, வனம் மற்றும் பஞ்சாயத்து துறைகளில் சட்டீஸ்கர் அரசுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.