சென்னையில் மேலும் 4 அம்மா உணவகங்கள். முதல்வர் திறந்து வைத்தார்.

amma unavagamஏழை எளியோர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவு அம்மா உணவகம் மூலம் நிறைவேறி வருகிறது. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் மிகக்குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டு ஏழைகளின் பசியை போக்கி வரும் நிலையில், தமிழக முதல்வர் சென்னையில் மேலும் நான்கு இடங்களில் நேற்று அம்மா உணவகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை, சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய நான்கு இடங்களிலும் அம்மா உணவகத்தை முதல்வர் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply