ஐ.நா கூட்டத்தில் பேச ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு. ஆயிரக்கணக்கில் திரளும் தமிழர்கள்.

rajapakseஇலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே, ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் நாளை பேசவிருக்கின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா அருகிலுள்ள கனடாவில் இருந்து நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் கார்கள் மற்றும் பேருந்துகள் மூலம், ஐ.நா அலுவலகம் நோக்கி வந்துகொண்டுள்ளனர். அமெரி்க்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் அணி அணியாக திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மகிந்தா ராஜபக்சே பேசுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பேனர்களை கைகளில் ஏந்தியபடி அவர்கள் தீவிர போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனையொட்டி ஐநா தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Leave a Reply