ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகை. முதல்வர் வரவேற்கிறார்.

cm and presidentபுதுடெல்லியில் இருந்து சென்னை வழியாக வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாநிலம் செல்லவிருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, சென்னை விமான நிலையத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா வரவேற்கிறார்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் பொன்விழா நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பங்கேற்க உள்ளார். இதற்காக, புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னைக்கு வருகை தரும் அவரை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது மூத்த அமைச்சர்களுடன் ஜனாதிபதியை சிறப்பாக வரவேற்பு செய்ய உள்ளார். முதல்வரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டவுடன் , அவர் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார்.

பிற்பகல் 1.30 மணியளவில் அவர் சென்னை வருவார் என்று தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வெள்ளிக்கிழமை மாலையே அவர் தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

Leave a Reply