மோடி மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் சம்மனுக்கு இந்தியா கடும் கண்டனம்.

modi in usa 1கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவர வழக்கு தொடர்பாக 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
 
நரேந்திரமோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரதமர் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த வேளையில் பிறப்பிக்கப்படிருக்கும் இந்த உத்தரவு  தீங்கு விளைவிக்கும் நோக்கில் உள்ளதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
 
ஒரு நாட்டின்தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என்கிற ரீதியில் மற்றொரு நாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்றுள்ள மோடி மீதான குற்றச்சாட்டு பொருத்தமற்றது என பாரதிய ஜனதா கட்சி விமர்சித்திருக்கிறது மேலும், இந்தியாவிலும், பிற நாடுகளிலும் புறக்கணிக்கப்பட்ட சில சக்திகள், மோடிக்கு எதிராக இத்தகைய பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருவதாக பாரதிய ஜனதா தேசிய செயலாளர் முரளிதர் ராவ் சாடியுள்ளார்.

நோட்டீஸ் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஒரு நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள மோடி போன்றவர்களை இந்த உத்தரவு பாதிக்காது என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply