ஜெயலலிதா குற்றவாளி. ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு. எம்.எல்.ஏ பதவி பறிபோனது.

jayaபெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

தண்டனை விவரங்களை மூன்று மணிக்கு அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.

 வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு.

 விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

 குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்

 ஜெ தீர்ப்பு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடைகள் அடைப்பு

 ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ.பதவியும் பறிபோகிறது

ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?
தமிழகத்தின் அடுத்த முதல்வர் பட்டியலில் நவநீத கிருஷ்ணன், ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் அடிபடுகிறது
-தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்? விசாலாட்சி நெடுஞ்செழியன்? செந்தில் பாலாஜி?

Leave a Reply