தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. ஐகோர்ட்டில் அரசு வழக்கறிஞர் தகவல்.

high_court

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்ட கடந்த சனிக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து, வரும் 6-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக சேகவர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தர். இந்த மனுவில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதாகக் கூறி வன்முறையில் ஈடுபட்டனர். எனவே, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை நிலை நாட்டவும், அதற்கு உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பொது மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை செய்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால சிறப்பு அமர்வு விசாரணை செய்தது. இந்த மனுவிற்கு பதிலளித்த அரசுத் தரப்பு அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, சில இடங்களில் போராட்டங்கள் மட்டும்தான் நடைபெற்றதாகவும், காஞ்சிபுரத்தில் ஒரு பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் இதுதொடர்பாக  ஏழு பேர்களும், தாராபுரத்தில் இரு சக்கர வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதற்காக ஆறு பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு எந்தவித அசம்பாவிதமோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தமிழக தலைமைச் செயலர், டிஜிபி இடையே ஏற்கெனவே கூட்டம் நடத்தப்பட்டு, சட்டம் – ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், 38 கம்பெனிகளைச் சேர்ந்த போலீஸார் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வருவதாகவும் கூறினார். ஒருசில சிறு போராட்டங்களைத் தவிர எங்கேயும் வன்முறைகள் நடைபெறவில்லை எனத் தெரிவித்தார்.

 இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் தமிழகத்தின் சட்ட – ஒழுங்கு நிலைமை குறித்த நிலை அறிக்கையை அக்டோபர் 6-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply