மனிதனின் தலைமுடி அளவே உள்ள உலகின் மிகச்சிறிய புத்தகம்.

smallest book 2 கனடாவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உலகின் மிகச்சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த புத்தகத்தை சாதாரண கண்களினால் படிக்க முடியாது. மிக நுண்ணிய மைக்ரோஸ்கோப் மூலமே படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகத்தை உருவாக்க இந்த இளைஞர்களுக்கு $15000 செலவானது என்பது குறிப்பிடத்தக்கது.

smallest book 1

மால்கம் டக்ளஸ் சாப்ளின் மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் ஆகிய இருவரும் இணைந்து உலகின் மிகச்சிறிய நாவலை எழுதி அவர் பிரசரித்தும் உள்ளனர். எலக்ட்ரானிக் மைக்ரோஸ்கோப் மூலம் படிக்கக்கூடிய இந்த மிகச்சிறிய புத்தகத்தின் அளவு 70 மைக்ரோ மீட்டர் முதல் 100 மைக்ரோ மிட்டர் உள்ளது. 30 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் மனிதனின் தலைமுடியவிட அகலம் குறைவானது என்றால் இந்த புத்தகத்தின் அளவை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். முழுக்க முழுக்க கிர்ஸ்டாலைன் சிலிக்கான் என்ற பொருளால் ஆன இந்த புத்தகம் தற்போது கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா நகரில் உள்ள சைமன் ஃபிரேசர் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

smallest book

இந்த புத்தகத்தை கின்னஸ் உலக சாதனை நிறுவனம், உலகின் மிகச்சிறிய புத்தகமாக ஏற்றுக்கொண்டு அதன் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

Leave a Reply