அஜீத் ,அனுஷ்கா, த்ரிஷா, மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் அஜீத் 55 படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளது. கவுதம் மேனன் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அஜீத், த்ரிஷா, அனுஷ்கா உள்பட படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களூம் இந்த கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
போலீஸ் வேடத்தில் நடிக்கும் அஜீத்துக்கும் வில்லன் அருண்குமாருக்கும் இடையே நடக்கும் பயங்கர சண்டைக்காட்சி ஒன்று படமாக்கிக்கொண்டிருக்கும்போது, சண்டைக்காட்சி குறித்து அஜீத்துக்கு விளக்கி கூறிய கவுதம் மேனனின் உதவியாளர் ஒருவர் அஜீத்தின் கன்னத்தில் தவறுதலாக அடித்து விட்டதாகவும், ஆனால் அஜீத் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த உதவி இயக்குனர் அஜீத்திடம் பல முறை மன்னிப்பு கேட்டதாகவும், அஜீத் அவரிடம் படப்பிடிப்பில் இதெல்லாம் சகஜம், இதற்காக கவலைப்பட வேண்டாம் என கூறியதாகவும் தெரிகிறது.
இந்த தகவல் மற்றொரு உதவி இயக்குனரால் டுவிட்டரில் சற்று முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜீத்தை அடித்த உதவி இயக்குனரின் பெயரை குறிப்பிடாமல் இந்த சம்பவத்தை அவர் தனது டுவிட்டரில் விளக்கியுள்ளார். கடந்த சிலமணி நேரமாக டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் இந்த செய்தி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், இதுபோன்ற ஒரு சம்பவமே அஜீத் 55 படப்பிடிப்பில் நடக்கவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.