முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுடெல்லியில் உள்ள காந்தி உருவச் சிலை முன் நேற்று அதிமுக எம்.பி-க்கள் அனைவரும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் அதிமுக-வினர் டெல்லியிலும் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காந்திஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மாலை போட்டு மரியாதை செலுத்தும் நிலையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஜெயலலிதாவின் ஜாமீன் மனு குறித்த விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வரும் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.