ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற விரும்பு கர்நாடகம்.

jayalalitha bailதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் வைத்திருப்பதில் பெரும் பிரச்சனைகளை தேவையில்லாமல் கர்நாடக மாநிலம் சந்தித்து வருவதாகவும் அதனால் மத்திய அரசு கடிதம் எழுதி அவரை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு முயற்சி செய்யவுள்ளது என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,

“இது மிகவும் உணர்ச்சிகரமான விவகாரம். சென்ற வாரம் தமிழக வழக்குரைஞர்கள், அதிமுக தொண்டர்கள் பல இடங்களில் கர்நாடக அரசுக்கு எதிராக இங்கே பல போராட்டங்களை நடத்தினர். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணையில் தாமதம் ஏற்படுத்துவதாக எங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அவருக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டதில் இருந்து நாங்கள் தேவையற்ற பிரச்னைகளை இதுவரை சந்திக்காத வகையில் இப்போது சந்தித்து வருகிறோம். எங்கள் மாநிலத்தில் இது போன்ற பிரச்னை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஜெயலலிதா தமிழக சிறைக்கு மாற்றப்பட்டால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சிறை விதிகளை காரணம் காட்டி ஜெயலலிதாவுக்கு வீட்டில் இருந்து உணவு வழங்குவதை தடை செய்த விவகாரம் தமிழகத்தை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், கர்நாடக அரசுக்கு இதனால் தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பல ஆண்டுகாலமாக காவிரி நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கர்நாடக அரசின் மீது அதிருப்தியில் உள்ளது தமிழகம். இந்நிலையில் மேலும் இரு மாநிலங்களுக்கு இடையில் பிரச்னைகள் புதிதாக உருவாவதை கர்நாடகம் விரும்பவில்லை என்கிறார் அந்த அமைச்சர்.

எனவே வரும் அக்.7ம் தேதி ஜெயலலிதா சார்பிலான ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் நீதிமன்ற நடைமுறைகளை மாநில அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. நீதிமன்ற தீர்ப்பில் ஏதேனும் விபரீதமான முடிவு எழுந்தால், நிச்சயமாக மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதி, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றச் சொல்லி கேட்டுக் கொள்ளும் என்று தெரிகிறது.

Leave a Reply